2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கோட்டைக்கல்லாறில் வீதி புனரமைப்பு

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 நவம்பர் 05 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோட்டைக்கல்லாறில் வீதி புனரமைப்பு மற்றும் கோட்டைக்கல்லாறு மேற்கில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழாவும் நேற்று (04) மாலை நடைபெற்றது.

நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருந்து வந்த கோட்டைக்கல்லாறு கண்னகி அம்மன் கோயில் வீதி, கிராமிய பொருளாதார அமைச்சின் 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம் புனரமைப்பு வேலைக்கான ஆரம்ப நிகழ்வு அமைச்சின் இணைப்பாளர் எஸ்.ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

அத்தோடு, கோட்டைக்கல்லாறு மேற்கு பிரதேச யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா மாதர் சங்க இணைப்பாளர் எஸ்.சந்திரிக்கா தலைமையில் இடம்பெற்றது.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் ஆறரை இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பதினாறு யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பிரதியமைச்சரின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், அதிதிகளாக பிரதியமைச்சரின் இணைப்பாளர்களான எஸ்.கண்ணன், திருமதி.ஜெ.மீனா, பிரதேச பிரமுகர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X