Freelancer / 2022 ஏப்ரல் 16 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்கு, துறைநீலாவணைக்குச் செல்லும் பிரதான வீதியில் இன்று காலை மருதமுனையைச் சேர்ந்த இருவர் கோழிகளின் கழிவுகளை பொலித்தீன் பைகளில் இட்டு அதனை முச்சக்கர வண்டியில் ஏற்றி வந்து துறைநீலாவணை பாதையில் வீசினார்கள்.
இவர்களை பின்தொடர்ந்த துறைநீலாவணை சேர்ந்த இளைஞர் குழாம், பொதுமக்கள் ஒன்றிணைந்து பின்தொடர்ந்து பிடித்துள்ளதுடன் அவர்களை எச்சரித்துள்ளதுடன் இருவரும் கொண்டு வந்த கழிவுகளை மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏற்றி அனுப்பியுள்ளனர்.
இவ்விடயமாக பிரதேசத்திற்கு பொறுப்பான களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர்,களுதாவளை பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர்,துறைநீலாவணைக்கான பிரதேச சபை உறுப்பினர் ,களுவாஞ்சிகுடி சுற்றாடல் பொறுப்பதிகாரி,துறைநீலாவணை தெற்கிற்கான கிராமசேவையாளர்,பொதுச்சுகாதார பரிசோதகர் போன்றோருக்கு தொலைபேசி மூலம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தகவல்களையும் வழங்கியுள்ளனர். (R)
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago