2025 மே 08, வியாழக்கிழமை

சுகாதாரமற்ற முறையில் இயங்கும் பொதுச்சந்தையால் மக்கள் அசெகரியம்

Thipaan   / 2015 டிசெம்பர் 12 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பிரிவில் இயங்கும் இறைச்சிக் கடைகள் மற்றும், மீன் விற்பனை செய்யும், இடங்கள் என்பன பன்நெடுங்காலமாக சுகாதாரமற்ற முறையில் இருந்து வருவதாகவும், இதனால் பொதுச்சந்தைக்கு வரும் பொதுமக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர் கொண்டு வருவதாகவும், வியாபாரிகளும் பொதுமக்களும், விசனம் தெரிவிக்கின்றனர்.

இன்றயதினம் சனிக்கிழமை (12) களுவாஞ்சிகுடி இறைச்சி விற்பனை செய்யும் இடத்துக்குச் சென்ற களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர்கர்கள், இறைச்சி விற்பனை செய்யும், இடங்களில் தரையோடுகள் பதித்து, மிகுந்த சுகாதாரத்துடன் இறைச்சி மற்றும் மீன்களை விற்பனை செய்யுமாறு வியாபாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

 இந்நிலையில் இப்பொதுச் சந்தைக் கடைகளுக்கு வருடாந்தம் 52,000 ரூபாய் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு வாடகை கொடுத்து வருவதாகவும், திடீரென தiரையோடுகள் பத்தித்தவுடன்தான் விற்பனைகளில் ஈடுபடவேண்டும் என பொதுச்சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இது, எமக்கு மிகுந்த கவலையளிக்கின்றது. எமது வியாபாரக் கடைகளை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைதான் புணருத்தாருணம் செய்து தரவேண்டும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

இவ்விடயம் குறித்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேச  சபையின் செயலாளர் தெரிவிக்கையில்,

எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.  களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியில் இயற்கும் இறைச்சிக்கடைகள், மற்றும், மீன் விற்பனை செய்யும் இடங்ளைப் புணரமைப்புச் செய்வதற்கு, மதீப்பீட்டறிக்கை தயாரித்து எமது தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பியுள்ளோம், எமக்குரிய அனுமதி கிடைக்கப்பெற்றதும் இக்கடைகளைப் புனரமைப்புச் செய்து கொடுக்கவுள்ளோம்.

 எனினும், எதிர்வரும் 2016.06.15 ஆம் திகதிவரைக்கும் மேற்படி தொழிலில் ஈடுபடும் விற்பனையாளர்கைள தற்போதிருக்கும் கட்டடத்தில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்குமாறும், 2016.06.15 ஆம் திகதிக்குள்  பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பரிந்துரைக்கமைய எமது திருத்த வேலைககள் பூர்தியாகிவிடும் என தாம் களுவாஞ்சிகுடி பொது சுகாதார வைத்திய அதிகாரியிடம் 05.12.2015 அன்று எழுத்துமூலம் கேட்டுக்கொண்டுள்ளதாக, களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைக்குப் பொறுப்பான மண்முனை தென் எருவில் பற்று பிரதேச  சபையின் செயலாளர் திருமதி யோகேஸ்வரி வசந்தகுமாரன் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X