2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சு.க. வுடன் முஸ்லிம்கள் இணைந்து செயற்படும் பணி ஒப்படைப்பு: ஹிஸ்புல்லாஹ்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முஸ்லிம்கள் மத்தியிலுள்ள அச்சத்தை போக்கி தேசிய ரீதியில் முஸ்லிம்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்து செயற்படுகின்ற பணி ஜனாதிபதியினால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடியில் சனிக்கிழமை (05) இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி நிர்வாக காலத்தில் பொதுபல சேனா போன்றவற்றின் நடவடிக்கையினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மீது முஸ்லிம்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தேர்தல் முடிவுகள் இதனை தெளிவாகக் காட்டியுள்ளதென எனது தேசியப்பட்டியல் நியமனத்துக்கு பின்னர் ஜனாதிபதியை நான் சந்தித்தபோது, அவர் என்னிடம் இவ்வாறு கூறினார்.

மேலும், முஸ்லிம்கள் மத்தியிலுள்ள அச்சத்தைப் போக்கி தேசிய ரீதியில் அவர்களை எமது கட்சியுடன் இணைத்து செயற்படும் பணியை என்னால் செய்யமுடியுமென்ற நம்பிக்கையில் என்னை தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமித்து, அப்பணியை என்னிடம் ஒப்படைத்துள்ளார்' என்றார். எனவே, ஜனாதிபதியினால் ஒப்படைக்கப்பட்டுள்ள இப்பணியை என்னால் முடிந்தவரை நான் நிறைவேற்றுவேன்' எனவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X