Princiya Dixci / 2016 ஜூன் 07 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம்.நூர்தீன்
சிங்கள தேசிய வாதத்தின் மீள் எழுச்சி தொடர்பில் முஸ்லிம்கள் அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இன்று செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் தராவீஹ் மற்றும் கியாமுல் லைல் உள்ளிட்ட இரவு வணக்கங்களில் ஈடுபடும் போது, தமது மார்க்கக் கடமைகளை ஏனைய சமூகத்துக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் தொந்தரவுகள் ஏற்படாத வகையில் அமைதியாகவும் கண்ணியமாகவும் முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்துக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் பிற மதத்தவர்களுடன் ஒன்றாகக் கலந்தே வாழ்கின்றனர். கடந்த நோன்புகளிலும் இப்பகுதிகளில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டன.
இவ்வாறான அசம்பாவிதங்கள் இனிவரும் காலங்களில் ஏற்படாத வகையில் இளைஞர்கள் சரியான விதத்தில் வழிநடத்தப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை பள்ளிவாசல் நிர்வாகம், பொது அமைப்புக்கள் மற்றும் இயக்கங்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஏதாவது சிறு பிரச்சினை ஏற்படும் வரை காத்துக்கொண்டுள்ள சிங்கள தேசிய வாத அமைப்புக்கள் பிரச்சினையை பெரிதுபடுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago