2025 மே 08, வியாழக்கிழமை

சித்தாண்டியில் விவசாயக் கண்காட்சி

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். பாக்கியநாதன்

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் வழிகாட்டலில், மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் 2015ஆம் ஆண்டுக்கான மாபெரும் விவசாயக் கண்காட்சியும் விற்பனையும், எதிர்வரும் 17, 18 மற்றும் 19ஆம் திகதிகளில் மட்டக்களப்பு, சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுச்சிமிகு விவசாய உற்பத்திகள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தப்படுவதுடன், விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர், கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய அமைச்சர்கள், மாகாண சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X