2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சிறுமிக்குச் சூடு வைத்த விவகாரம்: தந்தைக்கும் வளர்ப்புத் தாய்க்கும் பிணை

Princiya Dixci   / 2016 மே 24 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

காத்தான்குடியில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்துக் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் இரண்டாவது மனைவி ஆகியோருக்கு, இன்று செவ்வாய்க்கிழமை (24) பிணை வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி இருவரும் தலா 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் நால்வர் கொண்ட சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேற்படி இருவரும், கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி காத்தான்குடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X