Suganthini Ratnam / 2017 ஜனவரி 16 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
பொலிஸ் நிலையங்களால் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும்; அமைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களானது, பிரஜா பொலிஸ் அமைப்பு என்று பெயர் மாற்றப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.அரசரெட்ணம் தெரிவித்தார்.
தாண்டவன்வெளி சிவில் பாதுகாப்புக் குழுவினர் இருவரையும் கிராம அலுவலர் இருவரையும் கௌரவிக்கும் நிகழ்வு, தாண்டவன்வெளி பேடினன்ஸ் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'பொலிஸாருடனான பொதுமக்களின் சிநேகபூர்வமான உறவு பலம் மிக்கதாக அமைய வேண்டும். பொதுமக்கள் எந்த வேளையிலும் பயமின்றி பொலிஸ் நிலையத்துக்கு வந்து உங்களின் முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாம். 24 மணிநேரமும் உங்களுக்கு உதவ நாம் தயாராக உள்ளோம்' என்றார்.
'யுத்த காலத்தில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் சென்றதால், பொலிஸார் மற்றும் பொதுமக்களுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலைமையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களுடன் நட்புறவை ஏற்படுத்தும் வகையில் பொலிஸாரின் செயற்பாடுகள் அமைய வேண்டும்' என்றார்.
நலனை மாத்திரம் கருத்திற்கொண்டு பலனை எதிர்பாராமல் கடமைகளைச் செய்யுமாறு சிவில் பாதுகாப்புக் குழுவினரிடம் அவர்; வேண்டுகோள் விடுத்தார்.
32 minute ago
32 minute ago
42 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
32 minute ago
42 minute ago
51 minute ago