2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2016 ஜூன் 01 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள இரண்டு வர்த்தக நிலையங்களிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்ஸான் குறூஸ் தெரிவித்தார்.

மேற்படி பிரதேசத்தில்; மீன்பிடி உபகரணங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களில் இன்று புதன்கிழமை கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலக அதிகாரிகள் திடீர்ச் சோதனை மேற்கொண்டனர். இதன்போது, தங்கூஸி வலை வலை எனப்படும் சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சட்டவிரோத வலைகளை விற்பனை செய்ய வேண்டாம் என்று பலமுறை மீன்பிடி உபகரணங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X