Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு கிராமத்தில் புழக்கமில்லாத சந்தைப் பகுதியில் கடந்த14ஆம் திகதி மர்மமாக இறந்த கிடந்த நிலையில் மீட்கப்பட்ட நபரை அடையாளம் காண உதவுமாறு, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்தற்போது வைக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த நிலையில் காணப்பட்ட நபர், 72 வயதுடைய கந்தசாமி ராஜகோபால் என அடையாளம் காணப்பட்டுள்ளாரெனத் தெரிவித்த பொலிஸார், இவரது மர்ம மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை, அநாதரவான நிலையில் வாழ்ந்து வந்த இவரைப் பற்றிய மேலதிக தகவல்களை எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
மரணித்தவர், தமது இளமைக் காலத்தில் பெரியபோரதீவுப் பிரதேசத்துக்கு வந்து, அங்கேயே தனித்த நிலையில் கடந்த 40 வருடங்களாக சீவித்து வந்ததாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பொரியபோரதீவுப் பகுதி பொதுச் சந்தையையே அவர் தனது வசிப்பிடமாக மாற்றிக் கொண்டதாகவும் கிராம மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் 0652250022 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்துமாறு, பொதுமக்களைக் கேட்டக்கொள்வதாக, களுவாஞ்சிக்குடி பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.ஏ.கே.எம். தாஹிர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .