Menaka Mookandi / 2016 ஜூன் 05 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட பண்டாரியவெளியில் ஆணிண் சடலமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
பண்டாரியவெளி ஆற்றங்கரையை அண்டிய சதுப்பு நிலப்பகுதியில் மரமொன்றிற்கு கீழ் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் பண்டாரியவெளி கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான நல்லதம்பி சிவஞான செல்வம் (67) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நேற்று சனிக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இவரை உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
49 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
4 hours ago