2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவர் தெரிவு

வா.கிருஸ்ணா   / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்ட வருடாந்த சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில், குறித்த சங்கத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவரான சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத், சுமார் 24 வருடங்களாக சட்டத்தரணியாக கடமையாற்றிவருவதுடன், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டச் சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய செயலாளராக சட்டத்தரணியும் முன்னாள் ஊடகவியலாளருமான சுலோஜன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவரான இவர்,  12 வருடங்களாக சட்டத்தரணியாக செயற்பட்டுவருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .