2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சட்டவிரோத சம்பவங்களை எதிர்த்து வீதிமறியல்

Editorial   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அன்புவழிபுரம் கிராம சேவகர் பிரிவிலுள்ள காந்திநகர் கிராமத்தில் இடம் பெற்றுவரும் சட்டவிரோத சம்பவங்களான போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் வாள் வெட்டுக்கள், அசிட்வீச்சு, வழிபறி முதலியனவற்றை உடனடியாக கட்டுப்படுத்துமாறு கோரி, பொது மக்கள் நேற்றுமுன்தினம் (01) அனுராதபுர சந்தை, கண்டி பிரதான வீதியில் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள், தொடர்ச்சியாக இடம் பெற்ற போதும் பொலிஸாரால் கைது செய்யப்படுபவர்கள் அன்று மாலையோ மறுநாளோ மீண்டும் அப்பகுதிகளில் உலாவுவதை கண்ட மக்கள் பொலிஸாரின் மீது நம்பிக்கை இழந்து ஊடகங்கள் மூலம் இப்பிரச்சினையை வெளிப்படுத்தி உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் சில இலத்திரனியல் ஊடகங்களுக்கும் அச்சு ஊடகங்களுக்கும் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த உப்புவெளி பொலிசார் உடனடியாக தாம் சம்பந்தபட்டவர்களை கைது செய்வதாகவும் வீதியை விட்டுச் கலைந்து செல்லுமாறும் கோரினார், அதற்கு கருத்து தெரிவித்த கிராமத்தின் முன்னோடிகள் ( 02) திகதி மாலை 5 மணிக்கு முன் சம்பந்தப்ட்ட குற்றவாளிகளை கைது செய்யாதவிடத்து தாம் மீண்டும் பாரியளவிலான ஒரு போராட்டத்தினை மேற் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .