Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 19 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, ஏறாவூர் நகர சபையால் சேகரிக்கப்படும் மிருகங்களின் எச்சங்களை, ஏறாவூர் ஐந்து எல்லைப்பகுதியில் கொட்டப்படுவதைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, இன்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மிருகங்களின் எச்சங்கள் கொட்டப்படுவதால், செங்கலடி செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் - 5, சேனைக்குடியிருப்பு, குமாரவேலியார் கிராமம், அம்மன்புரம் போன்ற பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும், கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் அருகிலுள்ள கிணறுகள், கோவில்கள், வீடுகளில், மிருக எச்சங்களைக் கொண்டு வந்து காகங்கள் போடுவதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் வருகை தந்து, பொதுமக்களுடன் இணைந்திருந்தார்.
குறித்த இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், அவ்விடத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முடியாதென எச்சரித்தனர்.
தொடர்நது அங்கு வந்த நகர சபைத் தவிசாளர் அப்துல் வாஸித், முன்னாள் எம்.பி விழேந்திரனுடன் கலந்துரையாடிய பின்னர், மக்களுக்கும் இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கையெடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .