Editorial / 2022 மார்ச் 07 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவுகளுக்கு நியாயம் கிடைக்க சர்வதேசம் தலையிட வலியுறுத்தி, மட்டக்களப்பில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நாளைய தினம் சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், வட, கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றிகூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபி வரையில் ஊர்வலமாக வந்து அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் குணசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இப்போராட்டம் காரணமாக, காந்திபூங்காவில் பெருமளவான பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் குவிக்கப்பட்டிருந்ததுடன், பெருமளவானோர் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

6 minute ago
13 minute ago
48 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
48 minute ago
59 minute ago