Editorial / 2020 ஜனவரி 28 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர், தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாகக் கைதுசெய்யப்பட்ட 61பேரின் விளக்கமறியல், பெப்ரவரி 11ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே, மேற்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எஸ்.தியாகேஸ்வரன் முன்னிலையில் இன்று (28) சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது, விளக்கமறியல் உத்தரவை நீதவான் நீடித்தார்.
மொத்தமாக கைது செய்யப்பட்ட 64 பேரில் மூவர் ஏற்கெனவே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago