Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டச் சாரதிகள் சங்கம், மட்டக்களப்பு டச் பார் சன சமூக மண்டபத்தில், நேற்று (09) மாலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தனியார் வாகனங்களில் கடமையாற்றும் சாரதிகளின் நன்மைகருதி மேற்படி சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் அங்குரார்ப்பணக் கூட்டம், சாரதி ஜட்லி யூட் தலைமையில் நடைபெற்றது. இதில் 75க்கும் மேற்பட்ட சாரதிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் தலைவராக சு.சுரேஷ்குமார், செயலாளராக அ.ஜெயராசா, பொருளாளராக ஜட்லி ஜூட் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சாரதிமார் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சாரதிகளை ஒருங்கிணைத்தல், சாரதிகளின் உரிமைக்காகக் குரல் கொடுத்தல், விபத்தின் போது காயமடையும் மரணமடையும் சாரதிகளின் குடும்பங்களுக்கு உதவுதல் போன்ற நலன்களைக் கருதி, குறித்த சாரதிகள் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago