Editorial / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இ.சுதாகரன்
நாட்டில் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வருப் போகும் ஒருவர், சிறுபான்மை மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டுமென, முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
பொது நோக்கு அடிப்படையில், மனித நேயம் போற்றக் கூடிய வேட்பாளர்களை, பெரும்பான்மை இனத்தைப் பிரதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் முன்னிலைப்படுத்துவது அவசியமானது எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள தமது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டினுடைய ஜனாதிபதியாக வர இருக்கும் பெரும்பான்மை இனத்தினைத் சேர்ந்தவர் யாராக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அவர்களது செயற்பாடுகள் அமைய வேண்டுமென்றார்.
மாறாக சிறுபான்மை இனத்தவர்களை அடிமைப்படுத்தும் செயற்பாடுகள் அன்று முதல் இன்று வரைக்கும் நடைபெற்று வருவதாகவும் இதனால் அதிகளவில் பாதிப்பை எதிர்கொள்கின்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறியுள்ளதாகவும் அவர்ர் தெரிவித்தார்.
மேலும், மக்களுடைய தற்போதைய தேவை பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மக்கள் நலன் கருதிச் செயற்படுகின்ற பொது நோக்குடைய தலைவர் ஒருவரே எனவும் இதில் எதுவிதமான மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை எனவும், அவர் தெரிவித்தார்.
40 minute ago
49 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
49 minute ago
57 minute ago