2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சிறுமி கர்ப்பம் : இளைஞன் கைது

Freelancer   / 2023 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

15 வயது சிறுமியை 3 மாத கர்ப்பிணியாக்கிய 18 வயதுடைய இளைஞன்  ஒருவரை  செவ்வாய்க்கிழமை (08) கைது செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில்  இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 15 வயதும் 8 மாதம் கொண்ட சிறுமி ஒருவரை 18 வயதுடைய இளைஞனை காதலித்து வந்த நிலையில் சிறுமியை 3 மாத  கர்ப்பமாக்கியதையடுத்து அவர்கள் இருவரையும் அவர்களது பெற்றோர் கணவன் மனைவியாக வாழ்வதற்கு அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக  சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவல் பிரகாரம் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயது இளைஞனுக்கு எதிராக கடந்த முதலாம் திகதி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரும் ஒழிந்திருந்த நிலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய  18 வயது  இளைஞனை  சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (08) கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .