Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 25 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 14 வயதுச் சிறுவனை கைதுசெய்துள்ளதாகவும் சிறுமியை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மருமகள் முறையிலான சிறுமியை, சிறுவன் காதலித்து வந்துள்ளதாகவும் கிரான்வேம்பு பகுதியிலுள்ள சிறுவனின் சகோரனின் வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக, பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து உறவினரிடம் சிறுமி தெரிவித்ததையடுத்து, பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) முறைப்பாடு செய்துள்ள நிலையில், குறித்த சிறுவனைக் கைதுசெய்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .