ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை சமூக ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல” என மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்புன் நிஸா றியாஸ் தெரிவித்தார்.
'மகிழ்ச்சியான குடும்பம்' எனும் செயற்றிட்டத்தின் கீழ், யுவதிகள் மத்தியில், ஏறாவூரில் இன்று (19) இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
“மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 2016ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற பதிவுகளின் அடிப்படையில், 59 சிறுமிகளும் 21 சிறுவர்களுமாக மொத்தம் 80 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
“அதேவேளை, இந்த வருட ஆரம்பம் முதல் கடந்த நவம்பர் மாதம் வரையிலும் 62 சிறுமிகளும் 7 சிறுவர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். இது கவலையளிக்கும் விடயமாக உள்ளது.
“பரபரப்பான தற்போதைய வாழ்க்கை நடைமுறையில் தன்னைத் தானே பராமரித்துக் கொள்வதற்கும், குடும்பங்களை, அயலவர்களை உற்றார், உறவினர்களை பராமரித்துக் கொள்வதற்கும் அவகாசம் இல்லாமல் அவஸ்தைப்படும் சூழ்நிலையக்குள் வாழ்க்கை இயந்திரமயமாகியுள்ளது.
“இந்நிலையில், 'மகிழ்ச்சியான குடும்பம்' என்ற கருப்பொருள் கனவாகவே மாறியுள்ளது.
“குறிப்பாக குடும்பங்களிலுள்ள சிறுவர்கள் ஆதரவற்ற நிலையை எதிர்நோக்குவதும் அதனால் அவர்கள் நெறிபிறழ்வுக்கு உட்படுவதும் அதிகரித்துள்ளது.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் வன்முறை, வேலைக்கமர்த்துதல், பாடசாலை இடைவிலகல், இளவயதுத் திருமணம், போதைப்பொருள் பாவனை என்பன தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன.
“இத்தகைய ஒரு சூழ்நிலைக்குள் இளம் சந்ததியினரை இட்டுச் செல்வதை எவரும் அனுமதிக்கக் கூடாது. இந்த விடயத்தில் பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர்கள், அதிபர்கள், அதிகாரிகள் உட்பட ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்புக் கூறலுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
5 minute ago
16 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
25 minute ago