Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியாஸ் ஆதம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர்கள், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளரும், ஏறாவூர் நகர சபை வேட்பாளருமான எம்.எஸ்.சுபையிர் தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (20) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, ஏறாவூர் நகர சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாகப் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, ஏறாவூர் நகர சபையை கைப்பற்றுமாறும், நகர சபை அதிகாரம் கிடைக்கப்பெற்றால் தன்னால் முடிந்த அபிவிருத்திப்பணிகளை செய்து தருவதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .