2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

சுமந்திரனின் மனு நிராகரிப்பு

Janu   / 2023 நவம்பர் 19 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திகுழு 4 கட்டத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து 4 பேரை விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம். சுமந்திரன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (17) கொண்டுவந்த நகர்த்தல் மனு விண்ணப்பத்தை நீதவான் நிராகரித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 30 ம்திகதி மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தின் போது மயிலத்தமடு மேச்சல் தலை பண்ணையாளர்கள் கச்சேரிக்கு முன்பால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு கடமைக்கு நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை அவர்களது கடமையை  செய்யவிடாமை மற்றும் சட்டவிரோத ஒன்று கூடல் நிகழ்வில் உறுப்பினராக இருந்த குற்றச்சாட்டின் பேரில் 12 பேருக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்துள்ளனர்.

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (17)  ஜனாதிபதி சட்டத்தரணி ஏம்.சுமந்திரன் இந்த வழக்கில் 3ம், 4ம், 8ம்,  9ம்  சந்தேக நபர்கள் தங்களது   உரிமை தொடர்பாக  ஒன்று கூடியதாகவும் அவர்களுடன் நா.உறுப்பினர்களை பொலிஸார் உட்செல்ல அனுமதித்ததாகவும் பின்னரே பொலிஸார் வேண்டு மென்று வழக்கு தாக்குதல் செய்துள்ளதாகவும் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறும் கோரி நகர்த்தல் முன விண்ணப்பம் ஒன்றை மட்டு நீதிமன்ற நீதவான் பீற்றப் போல் முன்னிலையில் திறந்த மன்றில் சமர்ப்பணம் செய்துள்ளார்.

இந் நகர்தல் மனு விண்ணப்பம் தொடர்பாக நீதவான் விசாரணையின் போது வழக்கு தாக்குதல் செய்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக அங்கு பெறப்பட்ட ஒளிபதிவு மூலமாக 12 சந்தேக நபர்களை இனங்கண்டு அவர்களை மன்றினூடாக அழைப்பானை நிறைவேற்றப்பட்டது ஆனாலும் அவர்கள்  இதுவரை பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலங்கள் கொடுக்கப்படாத காரணத்தால் சட்டத்தரணி சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட  முன் நகர்த்தல் மனு விண்ணப்பத்தை நீதவான் நிராகரித்துள்ளார்.

கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X