2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

சுற்றுலாத்துறையை மேம்படுத்த விசேட கலந்துரையாடல்

Janu   / 2024 பெப்ரவரி 18 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முதலீட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடல்  மாவட்ட அரசாங்க அதிபர்  ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வின், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுற்றுலா விடுதிகள்,  உணவகங்கள் போன்றவற்றை அமைத்தல் மற்றும் முகத்துவாரத்தில் அமைந்துள்ள வெளிச்ச கோபுரத்தை புனரமைப்பு செய்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் பி.மதனவாசன்,  மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  சுதர்ஷினி ஶ்ரீகாந்த்,  243ஆம் படைப்பிரின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சன்டிம குமாரசிங்க,  மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எந்திரி.சிவலிங்கம்,  பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார்,  துறைசார் நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதிரன்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .