2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

“சூறையாடியவர்கள் சூறையாட திட்டம்”

Editorial   / 2024 ஜூன் 14 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


கனகராசா சரவணன்

கிழக்கை மீட்போம்  என்ற பேர்வையில் மட்டக்களப்பில் பாதை அபிவிருத்தியில் தரகு பணத்தில் அள்ளிய பல கோடிகளை கொண்டு பாதைகளையும், போதைகளையும் காட்டி அம்பாறை மாவட்ட தமிழர்களை ஏமாற்ற நினைக்கும் சக்திகளிடம் விலை போகாது  தமிழ் மக்கள் விழிப்புடன்  செயற்படுங்கள் என  தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவரும்,  ரணில் 2024 செயலணியின் தலைவருமான   கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்

அவர், வியாழக்கிழமை (13) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனித்து கிழக்கில் தமிழர்கள் தனியாக ஆழ முடியாது என்று தெரிந்து இருந்தும் தனித்து கிழக்கை வலியுறுத்தும் பிரித்தாழும் சக்திகள் அபிவிருத்தி என்ற போர்வையில் அம்பாறை மாவட்ட தமிழர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை கொள்ளையடித்து தமது சுயலாக இருப்புக்காக தமிழர்களை அங்கு பூரணமாக இல்லாமல் செய்யும் நடவடிக்கையாகும்.

கிழக்கை மீட்போம் என தெரிவித்துக் கொண்டு  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல ஏக்கர் அரச காணிகளை தனது பினாமிகள் பெயரில் அபகரித்ததுவருவதுடன்  வீதி நிர்மானிப்பதற்கு ஒப்பந்தகாரரிடம் 10 சதவீதம் பணத்தை பெற்றுக் கொண்டு  பல கோடி பணத்தை கொள்ளையடித்துவருகின்றனர்.

இந்த நிலையில் எந்த எந்த திணைக்களங்களில் இருக்கும் வளங்களை எவ்வாறு சூறையாடாமே அந்த அந்த திணைக்களங்களுக்கு தனக்கு வேண்டிய அதிகாரிகளை நியமித்து அதனூடாக அரச வளங்களை சூறாயாடி வருவதுடன் வாகரை இறால் பண்ணை அமைக்கும் கம்பனியிடம் ஒரு தொகை பணத்தை வாங்கி கொண்டுள்ளனர்

இவ்வாறு தொடர்ச்சியாக மாவட்டத்திலுள்ள அரசாணிகளை அபகரித்து வருவதுன் அபிவிருத்தி என்ற பேர்வையில் 10 வீத தரகு பணம் ஊடாக கோடிக்கணக்கான பணத்தை அளிக் கொண்டு அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை விலை பேச முனைகின்றனர்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் இந்த மோசடி கும்பல் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷக்களுடன் இருந்து தமிழ் மக்களை அழித்து அவர்களின் உடமைகளை சூறாயாடி அவர்கள் தான் நல்லவர்கள், வல்லவர்கள் என்ற கூட்டம் இப்போது தமது இருப்பை காப்பாற்ற வேறு வழியில்லாமல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் இந்த நாட்டை வழிநடத்த நல்ல தலைவர் என தெரிவிக்கின்றனர்

இவ்வாறு காலத்துக்கு காலம் நாடகம் ஆடிவரும் இந்த கிழக்கை மீட்போம் என்றவர்கள் மட்டக்களப்பில் எல்லாவற்றையும் சூறையாடி விட்டு இப்போது பணத்தை கொடுத்து உங்கள் வாக்குகளை கொள்ளையிட்டு அம்பாறை மாவட்டத்தையும் சூறையாடுவதே இவர்களது திட்டம் எனவே இவர்களிடம் அம்பாறை தமிழ் மக்கள் விலைபோகாது அவதானமாகவும் விழிப்பாகவும் இருக்கவேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X