2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஜோசப் எம்.பி கொலைச் சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு மட்டு. மேல் நீதிமன்றில் தாக்கல்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 03 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும்  கிழக்கு மாகாணத்தின்  முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான  சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 4 பேரின் மீதான வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்;யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்;தில் எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
குற்றத்தடுப்பு பிரிவு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கியுள்ள குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சார்பில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கு எதிர் வரும் மே மாதம் 5ம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X