Kogilavani / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப் பொருளை முற்றாக ஒழிக்கும் திட்டத்தின் கீழ், பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி தலைமையில் போதைப் பொருளுக்கு எதிரான பேரணி நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர்; அஹமட் தெரிவித்தார்;.
இப்பேரணியைத் தொடர்ந்து, போதைப் பொருளுக்கெதிரான செயலணி ஒன்றையும் ஜனாதிபதி இங்கு ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்; மட்டக்களப்பு விஜயம் தொடர்பிலான முன்னேற்பாடுகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல், காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டி.கே.கருணாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்தின்போது, அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தல், மர நடுகை என்பனவும் இடம்பெறவுள்ளதாக இதன்போது அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
33 minute ago
33 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
33 minute ago
43 minute ago
52 minute ago