2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ஜனாசா விவகாரம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Princiya Dixci   / 2020 நவம்பர் 19 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

முஸ்லிம் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மட்டக்களப்பு மாநகர  சபை  முன்னாள்  உறுப்பினர் என்.கே.றமழான் முறைப்பாடு செய்துள்ளார்

முறைப்பாட்டுக் கடிதத்தை, கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய அவர், அதன் பிரதியை, மட்டக்களப்பிலுள்ள பிராந்திய அலுவலகத்தில் நேற்று (18) கையளித்தார்.

அந்த முறைப்பாட்டுக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாட்டில் பல மதங்களையும் இனங்களையும் சேர்ந்தோர் மரணிக்கின்றனர். அவ்வாறு நிகழும் மரணங்களில் முஸ்லிம் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய விடாமல, எமது இஸ்லாமிய மதக் கலாச்சார உரிமைகளை மீறி, சுகாதார அமைச்சு எரித்து வருகின்றது. இது இந்த நாட்டில் முஸ்லிம்கள் தொன்றுதொட்டு பேணிவந்த எமது இஸ்லாமிய மதக் கலாசாரத்துக்கு முற்றிலும் எதிரானதும் உரிமை மறுப்பானதுமாகும்.

“கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மரணிக்கும்  உடல்களை அடக்கம் செய்வதால் எதுவித கிருமித் தொற்றுக்களும் ஏற்படாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ள போதிலும் அதனை மீறி, எமது இஸ்லாமியர்களின் உடல்களை எரித்து வருகின்றார்கள். எமது மத உரிமையை  முழுமையாகப் பெற்றுத்தருமாறு, எனது முறைப்பாட்டை குறித்த சுகாதாரத் துறையினருக்கு எதிராக பதிவு செய்கின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X