Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஜனவரி 07 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜும்ஆ தொழுகை முடிந்த பிறகு, வீதிகளில் நின்று தேர்தல் மற்றும் அரசியல் பேச்சுக்களில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுமாறு, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் காத்தான்குடி பொலிஸாரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களது சம்மேளனத்தின் பதில் செயலாளர் மௌலவி எஸ்.எச்.எம்.றமீஸ் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'வெள்ளிக் கிழமைகளில், ஜும்ஆவுக்காக செல்பவர்கள், பள்ளிவாயலுக்குள்ளும் ஜும்ஆ முடிந்த பிறகு வீதிகளில் நின்றும், தேர்தல் மற்றும் அரசியல் பேச்சுக்களில் ஈடுபடுவதனால், குழுக்களுக்கிடையிலான பிரச்சினைகளும் கைகலப்புகளும் ஏற்பட்டு வருகின்ற நிலையில், பொலிஸாரால் தீர்த்து வைக்கப்படும் நிலைமைக்கு உள்ளாகின்றன.
'இதனால், வெள்ளிக்கிழமைகளில் அதிகமானோர் அவர்களது நேரங்களை பொலிஸ் நிலையத்திலேயே கழிக்கின்றனர்.
'எனவே, வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆவுக்காகச் செல்பவர்கள், பள்ளிவாயலுக்குள்ளும் ஜும்ஆ தொழுகை முடிந்த பிறகு வீதிகளில் நின்றும், தேர்தல் மற்றும் அரசியல் பேச்சுக்களில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுமாறும், ஜும்ஆ தொழுகை முடிந்தபின்னர் உடனடியாக தங்களது வீடுகளுக்குச் செல்லுமாறும் கேட்டுக்கொள்கிறோம்' என, அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
'அத்தோடு, ஜும்ஆவுக்காக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள், கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago