Princiya Dixci / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பாடசாலைகளிலும் அனைத்துத் தனியார் கல்வி நிலையங்களிலும், ஞாயிற்றுக்கிழமை காலை வேளைகளில் வகுப்புகள் நடத்துவது தடைசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிரதேச செயலகக் கேட்போர் கூட்டத்தில் நேற்று (13) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்தப்படுவதன் காரணமாக, அறநெறிப் வகுப்புகளுக்கு மாணவர்கள் வருகை தருவதில்லை என, கூட்டத்தில் கருத்தொன்று முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பாடசாலைகளில் நடைபெறும் விசேட வகுப்புகள் நடத்தக் கூடாது, எனத் தீர்மானிக்கப்பட்டது.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவிக்கையில்,
'ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் மதியம் 12 மணிவரை தனியார் கல்வி நிலையங்கள் இயங்கக் கூடாது என ஏற்கெனவே தீர்மானமெடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சில தனியார் நிலையங்கள், அவ்வாறு மீறும் பட்சத்தில் பிரதேச சபையினர் நடவடிக்கையெடுக்க வேண்டும்.
"அறநெறி வகுப்புகளுக்கு 11 தரத்துக்குட்பட்ட மாணவர்கள் செல்வதால் உயர்தரம் மற்றும் பட்டப்படிப்பு கல்வி மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்த முடியும்' என்றார்
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago