Princiya Dixci / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் எண்ணியல் (டிஜிட்டல்) வைத்தியசாலை திட்டத்துக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சுகாதார அமைச்சினால் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இலத்திரணியல் அரசாங்கம் எனும் திட்டத்தின் ஊடாக வைத்தியசாலைகளை டிஜிட்டல் வைத்தியசாலையாக மாற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் 300 வைத்தியாசாலைகள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 45 வைத்தியசாலைகள் தேர்த்தெடுக்கப்பட்ட நிலையில் குறித்த முதற்கட்டத் தேர்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை உள்வாங்கப்பட்டுள்ளது.
இதற்குமைய வைத்தியசாலை அனைத்து நடவடிக்கைகளும் கணினி மயப்படுத்தப்படவுள்ளதுடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதற்கட்டமாக வெளிநேயாளர் பிரிவில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறவரும் நோயாளர்களுக்குத் தற்போது கடதாசிப் சிற் வழங்கப்பட்டு வருகின்றது.
இத் திட்டத்தின் பிரகாகரம் கடதாசி சிற்றிக்குப் பதிலாக நோயாளிக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இவ் அடையாள அட்டை ஒரு தடைவ மாத்திரமே வழங்கப்படும், இவ் அட்டையில் நோயாளியின் விவரத்துக்கான தகவல், நோய் பற்றிய தகவல், மருந்து மற்று மாத்திரை போன்ற அனைத்துத் தகவல்களும் உள்ளடக்கப்படும்.
இதனூடக நோயாளியொருவர் சிரமமின்றி வைத்தியத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் மருத்துவ நடவடிக்கைகள் அனைத்தையும் இலகுவாக தங்குதடையின்றி முன்னெடுப்பதற்கு, இத்திட்டம் துணைபுரிய இருப்பதாகவும் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது வைத்தியசாலை தேர்ந்தெடுக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாக, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago