2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

​ ‘டிக்டொக்’ தோணி கவிழ்ந்ததில் இருவர் மரணம்

Editorial   / 2023 ஒக்டோபர் 09 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன் 

 மட்டக்களப்பு நாவலடி வாவிப்பகுதியில் டிக்டொக் செய்வதற்காக தோணியில் சென்றபோது தோணி கவிழ்ந்ததில் இரு  இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட நாவலடி பகுதியின் சீலாமுனைப்பகுதியிலிருந்து ஆறு இளைஞர்கள் தோணி ஊடாக ஞாயிற்றுக்கிழமை (08) பிற்பகல் வந்துள்ளனர்.

அப்பகுதியில் டிக்டொக்  வீடியோ செய்துவிட்டு தோணியில் மீண்டும் சீலாமுனைக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது தோணி கவிழ்ந்துள்ளது.

இதன்போது இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் பிரதேச மக்களினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதன்போது மட்டக்களப்பு சீலாமுனைப்பகுதியை சேர்ந்த 19வயதுடைய தவசீலன் கிருஸாந்த்,மாமாங்கம் பகுதியை சேர்ந்த 18வயதுடைய பிரபாகரன் பிருஜனன் ஆகியோர் வாவியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நீரில் மூழ்கிய இளைஞர்களை மீனவர்களும் பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளதுடன் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .