Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஜனவரி 21 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி நகர சபை பிரிவில் துப்பரவு செய்யப்படாமல் அடையாளம் காணப்பட்ட டெங்கு நுளம்பு பெருகும் காணிகள், காத்தான்குடி நகர சபையால் சுவீகரிக்கப்பட்டு அங்குள்ள கட்டடங்கள் மற்றும் வீடுகளை உடைத்து அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள காத்தான்குடி முதலாம் குறிச்சி ஊர் வீதியில், ஒரு வருடத்துக்கும் மேலாக இவ்வாறு துப்பரவு செய்யப்படாமல் காணப்பட்ட டெங்கு நுளம்பு பெருகும் இடம் என அடையாளம் காணப்பட்ட தனியார் ஒருவருக்குச் சொந்தமான வீடு, நேற்று (21) காலை உடைக்கப்பட்டதுடன், அக்காணியும் காத்தான்குடி நகர சபை ஊழியர்களால் துப்பரவு செய்யப்பட்டது.
காத்தான்குடி நகர சபை பிரிவு, தேசிய டெங்கு அபாய வலயத்துக்குள் இருப்பதால், டெங்கு நுளம்புப் பரவுவதை தடுக்கும் பொருட்டு, டெங்கு ஒழிப்பு திட்டத்தின் கீழ் துப்பரவற்று காணப்படும் வெற்றுக் காணிகளைத் துப்பரவு செய்தல், காணியை சுவீகரித்தல், மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுத்தல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக, காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி பாத்திமா றிப்கா ஷபீன் தெரிவித்தார்.
டெங்கு நுளம்பு பெருகும் என அடையாளம் காணப்பட்ட இந்த தனியாரின் வீடு, காத்தான்குடி நகர சபையின் ஊழியர்களைக் கொண்டு பெக்கோ இயந்திரத்தின் மூலம் உடைக்கப்பட்டது.
காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி பாத்திமா றிப்கா ஷபீன், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல்.நசிர்தீன் காத்தான்குடி பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.ஜரூப், நகர சபை கணக்காளர் எம்.மனாசிர் உட்பட அதிகாரிகள், பொலிஸார் ஆகியோர் முன்னிலையில், இக்காணி சுவீகரிக்கப்பட்டு அங்கிருந்த கட்டடமும் உடைக்கப்பட்டது.
இவ்வாறு காத்தான்குடி நகர சபை பிரிவில் பல இடங்கள் அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நகர சபையால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அக்காணிகளும் சுவீகரிக்கப்படும் எனவும் காத்தான்குடி நகர சபை செயலாளர் மேலும் தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago