2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

டெங்கு பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பம்

Janu   / 2023 நவம்பர் 21 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு  மாகாணத்தில்  நிலவும்  சீரற்ற  காலநிலை  காரணமாக  சுகாதார  அமைச்சினால் மட்டக்களப்பு  மாவட்டத்தில்  தொடர்ச்சியாக  டெங்கு  பரிசோதனை   முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

டெங்கு  நோய்  பரவும்  மாவட்டங்களில்  கிழக்கு  மாகாணத்தில்  முதன்மையாக  காணப்படும்  மட்டக்களப்பு  மாவட்டத்தின்  பொதுமக்களின்  பாதுகாப்பை  உறுதிப்படுத்தும்  வகையில்,  கிழக்கு மாகாண  ஆளுநரின்  உத்தரவின்  பெயரில்  மட்டக்களப்பு  நகரில்  விசேட  டெங்கு  பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

மாவட்ட  பிராந்திய  சுகாதார  சேவைகள்  திணைக்கள  பணிப்பாளர்  வைத்தியர்  குணசிங்கம்  சுகுணனின்   தலைமையில்  இந்த  விசேட  டெங்கு  பரிசோதனை  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு  மாநகர  சபை  ஆணையாளர்  எஸ்.சிவலிங்கம்  மாநகர  சபை  ஊழியர்கள்  பொதுச்  சுகாதார  பரிசோதவர்கள்  என  பலரும்  இந்த  விசேட  டெங்கு  பரிசோதனை  நடவடிக்கைகளில்  கலந்து  கொண்டுள்ளனர். 

அரச  ஊழியர்களை  பாதுகாக்கும்  வகையிலும்  காரியாலயங்களுக்கு  வரும்  பொது  மக்களின்  பாதுகாப்பை  உறுதிப்படுத்தும்  வகையிலும்,  இந்த  விசேட  திட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வ.சக்தி       


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X