2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

டெங்குத் தொற்று; கிழக்கில் 5,914 பேர் பாதிப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில், 5,914 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் ஆறு பேர், டெங்குக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர் எனவும் கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

2019 டிசெம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில்,  திருகோணமலை மாவட்டத்தில்  12 வைத்திய சுகாதார அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில்  282 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதில் மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிஞ்சாஞ்கேணி, தம்பலகாமம், திருகோணமலை ஆகிய பகுதிகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, 2019 ஜனவரி மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரை  திருகோணமலை மாவட்டத்தில் 2,276 டெங்கு நோயாளர்களும், கல்முனை பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்குட்பட்ட பகுதியில் 1,132 டெங்கு நோயாளர்களும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ்  2,218 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் 09 மரணங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X