2025 மே 19, திங்கட்கிழமை

‘த.தே.கூ. பலருக்கு சவால்’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஜனவரி 23 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘எமது பிரதேசங்களில் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களின் வார்தைகள் எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சாடுவதாகவே இருக்கின்றது. ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் பலருக்கு சவாலாக இருக்கின்றது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ஆம் வட்டார வேட்பாளர் அந்தோனி கிருரஜன் தெரிவித்தார்.

புளியந்தீவு தெற்கு வட்டாரத்தில் நேற்று (22) காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இதானைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“என்னைப் பொறுத்தவரையில் அரசியல் என்பது புதிது. ஆனால், சமூக சேவை என்பது பழகிய ஒன்றே. எமது புளியந்தீவு தெற்கு வட்டாரமானது மட்டுநகரின் மத்தியில் அமைந்தாலும் மிகவும் பின்தங்கிய பிரதேசமாகவே காணப்படுகின்றது.

“வருமானம் குறைந்த குடும்பங்கள் அதிகம் காணப்படுகின்றதும், கல்வி அபிவிருத்தியில் பின்தங்கிய நிலைமையுமே இங்கு அதிகளவில் காணப்படுகின்றது.

“எமது மக்கள் இதற்கு முன்னர் பலரை பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தேர்தலுக்கு களமிறக்கி வெற்றியடையச் செய்தும் உள்ளனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளிவிற்கு எமது பிரதேசத்துக்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை.

“இந்த எமது மக்களின் எதிர்பார்ப்பை கூடிய அளவு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் மேற்கொள்வதற்காகவே, இத்தேர்தலில் ஓர் இளைஞர் என்ற வகையில் எமது தேசியத்தின் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் களமிறங்கியுள்ளேன்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது வெறுமனே ஓர்அரசியற் கட்சி அல்ல. அது தமிழ் மக்களின் விடிவுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகும். தற்போது அது அந்த நோக்கத்தை மையமாகக் கொண்டே உழைத்துக் கொண்டிருக்கின்றது. அதனைப் பலப்படுத்த வேண்டியது தமிழ் மக்கள் அனைவரினதும் தலையாய கடமையாகும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X