2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

தேர்ச்சி பெற்ற ஆசிரியரை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 22 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, ஓட்டமாவடி சரிப் அலி வித்தியாலயத்தின் ஐந்தாம் தர மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சைக்குத்  தயார்ப்படுத்துவதற்கு தேர்ச்சி பெற்ற ஆசிரியர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, வித்தியாலயத்தின் முன்வாசல் கேட்டுக்கு பூட்டுப் போட்டு ஆசிரியர்களையும் மாணவர்களையும் வித்தியாலயத்தினுள்ள நுழையவிடாதவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், தற்போது கல்வி அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட ஆசிரியரை மாற்றி  புலமைப் பரிசில் பரீட்சைக்கு கற்பிக்கக்கூடிய  தேர்ச்சி பெற்ற  பிறிதொரு ஆசிரியரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.  

இந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி மற்றும் வாழைச்சேனை பொலிஸாரும்; பெற்றோர்களுடன் கலந்துரையாடினர். இதன்போது,  குறித்த வித்தியாலயத்திலிருந்து ஆசிரியர் ஒருவரை இடம் மாற்றி அதற்கு பதிலாக பொருத்தமான ஆசிரியர் ஒருவரை  நியமித்து தருவதாக இவர்கள் வழங்கிய உறுதிமொழியைத்; தொடர்ந்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .