Princiya Dixci / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மகளிர் அபிவிருத்தி நிலையங்களில் தொழில் பயிற்சி பெறும் யுவதிகளின் ஊக்குவிப்புக் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.
கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் நடத்தப்பட்டு வரும் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களிலுள்ள மகளிர் அபிவிருத்தி நிலையங்களுக்கு செவ்வாய்க்கிழமை சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர், அங்கு தொழிற்பயிற்சி பெற்றுவரும் யுவதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.
மகளிர் அபிவிருத்தி நிலையங்களில் தொழில் பயிற்சி பெறும் யுவதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்குவிப்புக் கொடுப்பனவை அதிகரித்துத் தருமாறு பயிற்சியாளர்கள் இதன் போது, முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்,
'மகளிர் அபிவிருத்தி நிலையங்களில் தொழில் பயிற்சி பெறும் யுவதிகளுக்கு தற்போது நாளொன்றுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பணவாக 100 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறான தொழிற் பயிற்சியை பெற்றவர்களுக்கு எதிர்காலத்தில் தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
நவீன தைய்யல் பயிற்சி மற்றும் ஏனைய பூக்கட்டுதல் பயிற்சி அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் பயிற்சி போன்றவைகளில் நவீன தொழிநுட்பத்தை பயன் படுத்த வேண்டும். அதற்காக கிழக்கு மாகாண சபையினால் முடியுமான உதவிகளை வழங்க முயற்சி செய்வோம்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ்.கவிதா மற்றும் மாவட்ட உத்தியோகத்தர் உம்.பிறேம்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago