Princiya Dixci / 2016 ஜூன் 07 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித், வடிவேல் சக்திவேல், எம்.எஸ்.எம்.நூர்தீன்
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை அமுல்படுத்துவதற்கான ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
06 மாதங்களுக்கான இந்த நியமனங்களுக்குத் தகுதியானவர்கள் தமது சுயவிபரக்கோவை, சான்றிதழ்கள் மற்றும் சேவை அனுபவச் சான்றிதழ்கள் என்பவற்றுடன், நாளைய தினம் (08) பிற்பகல் 02 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேற்படி அமைச்சின் புதிய வீடமைப்புத் திட்டங்கள், வீடமைப்புத் திருத்தம், மலசலகூட வசதிகளை ஏற்படுத்தல், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான வலைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தத் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் நியமனம் செய்யப் படுகின்றனர்.
குறித்த நேர்முகப்பரீட்சை, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெறும்.
47 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
4 hours ago