Niroshini / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
தேவ அழைத்தல் தினத்தையொட்டி நேற்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் விசேட நிகழ்வு மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையின் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேவ அழைத்தல் சபையின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் அருட்தந்தை பிரைனர் செலர்,மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இக்னேசியஸ், துறவறசபையின் குருமார்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திருப்பலியை தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி கூடமும் திறந்துவைக்கப்பட்டது.
தேவ அழைத்தல் சபையின் செயற்பாடுகள் மற்றும் கிறிஸ்தவ மக்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த விடயங்கள் தாங்கியதாக இந்த கண்காட்சி கூடம் அமைக்கப்பட்டிருந்தது.
இதனை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை திறந்துவைத்ததுடன் கண்காட்சியினையும் பார்வையிட்டார்.


40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago