2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையத்துக்கு புதிய பணிப்பாளர்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 10 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த செய்யித் ஸாபித் நியமனம் பெற்றுள்ளார்.

கூடவே அவர் இப்பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.

இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது என்றும் அவர் நேற்று வியாழக்கிழமை  தெரிவித்தார்.
செய்யித் ஸாபித் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத் துறையில் முதுமாணி ஆய்வு பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்தவராகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X