2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தங்கநகைகள் திருட்டு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிலாமுனைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து தங்கநகைகளும் பணமும் திருட்டுப் போயுள்ளமை தொடர்பில் அவ்வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீட்டுக் கூரையின் ஓடுகளை கழற்றிவிட்டு உள்நுழைந்த திருடர்கள் இருவர், வீட்டிலுள்ளவர்களுக்கு கத்தியைக் காட்டி அச்சுறுத்திவிட்டு எட்டுப் பவுண் தாலிக்கொடி, இரண்டு தங்கச்சங்கிலிகள்,  ஒரு சோடித் தோடு மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X