2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தங்க நகைகள் திருட்டு; குடும்பஸ்தர் கைது

Princiya Dixci   / 2020 நவம்பர் 29 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு நகர், புளியந்தீவு பகுதி வீடொன்றில், கடந்த 19ஆம் திகதி  66 1/2 பவுன் நகைகளை திருடிய சந்தேகத்தின் பேரில் ஒரு பிள்ளையின் தந்தையான 23 வயது குடும்பஸ்தர் ஒருவரை, பொதுமக்களின் உதவியுடன் கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகுழூர்முனை வயல் வீதி பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, திருடப்பட்ட நகைகளுடன் இந்நபர் கைதுசெய்யப்பட்டார் என மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் பண்டார தெரிவித்தார்.

இந்தச் சுற்றிவளைப்பை, மாவட்ட குற்ற விசாரணை பிரிவுக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கமைய, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மென்டிஸ் வழிகாட்டலின் கீழ், மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X