Princiya Dixci / 2017 மார்ச் 01 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலியான காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான சிவானந்தம் தர்மீகனின் (வயது 26) இறுதிக் கிரியைகள், காரைதீவில் நாளை (02) நடைபெறவுள்ளதாக, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் தெரிவித்தார்.
உத்தியோகத்திரின் பூதவுடல், இன்று அதிகாலை கொழும்பிலிருந்து காரைதீவுக்குக் கொண்டு வரப்பட்டு, மக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கிரியைகள், மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் உத்தியோகத்தர்களினின் பூரண அணிவகுப்பு மரியாதையுடன், இடம்பெறவுள்ளன.
அவரது மரணத்தையொட்டி, மட்டக்களப்பு சிறைச்சாலையில் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், அனுதாபப் பதாதைகளும் தொங்கவிடப்பட்டுள்ளன.
இறுதியாக இணைத்துக்கொள்ளப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தார்களில் சிவானந்தம் தர்மீகனும் ஒருவராவார்.
.jpg)
.jpg)
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago