2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தமிழர் விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவரை வரவேற்கத் தயார்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 17 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பில் நாளை  மறுதினம் (19) தமிழர் விழாவை  கோலாகலமாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தனை  வரவேற்பதற்குத் தயாராகி வருவதாக த.தே.கூ தெரிவித்தது.

இந்த விழாவின்போது, ஊர்வலமும் தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

பிற்பகல் 1.30 மணிக்கு கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமாகவுள்ள ஊர்வலத்தில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூ தலைவருமான  இரா.சம்பந்தன் கலந்துகொள்ளவுள்ளதுடன், அவர்  தேவநாயகம் மண்டபத்துக்கு அழைத்து வரப்படவுள்ளார். இதனை அடுத்து, நிகழ்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X