வி.சுகிர்தகுமார் / 2018 ஜனவரி 14 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தமிழர்களின் பிரச்சினையை, ஜக்கிய நாடுகள் வரை கொண்டு செல்ல ஒரு சுயேற்சை குழுவாலே முடியுமா? அப்படியானால் அவை ஏன் இன்று உருவாக்கப்பட்டுள்ளது?” என அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கேள்வியெழுப்பினார்.
அத்துடன், “அவ்வாறான குழுக்களின் ஊடாக, தமிழர்களின் பலத்தை உடைப்பதே நோக்கம். தமிழர்களின் பலத்தை உடைப்பது என்பது காரைதீவு வாழ் தமிழ் மக்களின் பலத்தை உடைப்பதற்கு சமம். இதனை கருத்திற்கு கொண்டு சுயமாக சிந்தித்து வாக்களியுங்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.
காரைதீவில் நடைபெற்ற காரைதீவு பிரதேச சபை சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் மற்றும் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, (13) அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தாய்க்கட்சி. அவ்வாறான கட்சியை உடைப்பதற்கு, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை நாம் அறிவோம்.
“இதற்காகவே இன்று பல கட்சிகள் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளது. அக்கட்சிகள் சுயேற்சை வடிவிலும் பெரும்பான்மை கட்சி வடிவிலும் உள்வாங்கப்பட்டுள்ளன.
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago