Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
வா.கிருஸ்ணா / 2017 நவம்பர் 14 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதெனவும் பிரிந்து செயற்படுதல் என்பது, தமிழ் மக்களுக்கான தீர்வுப் பாதையில் மிகவும் கஸ்டமான நிலையை ஏற்படுத்துமெனவும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவை நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மட்டக்களப்பு, பார் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் தெரிவித்ததாவது,
“தமிழ் மக்களுக்குள் ஏற்படும் பிளவுகளைப் பெரும்பான்மையினக் கட்சிகள் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது. அது, துன்பங்களுடன் நொந்துபோயுள்ள தமிழ் மக்களை, மீண்டும் துன்பத்துக்குத் தள்ளிவிடும்.
“தமிழ் மக்கள் பேரவை பிளவுபட்டு நிற்காமல், அனைத்துத் தமிழ்த் தலைமைகளும் ஒன்றாக இணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென, வேண்டுகோள் விடுக்கின்றேன்.
“ஈ.பி.ஆர்.எல்.எப்.விலகுவதால் எந்தப் பாதிப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்படப்போவதில்லை. எனினும், சுரேஸ் பிரேமச்சந்திரன், தொடர்ந்தும் த.தே.கூவுடன் இணைந்து பயணிக்கவேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago