Princiya Dixci / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி
மட்டக்களப்பு நகரில் பறவைகளைச் சுடும் துப்பாக்கி மூலம் தாதி உத்தியோகத்தர் ஒருவர் மீது நேற்றிரவு (22) துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது படுகாயமடைந்த தாதி உத்தியோகத்தர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் பூம்புகார், கண்ணகியம்மன் வீதியை சேர்ந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தலைமை தாதி உத்தியோகத்தராக கடமையாற்றும் நடராஜா ராதா என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
44 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
2 hours ago