2025 மே 19, திங்கட்கிழமை

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய யானை இ​றப்பு

Editorial   / 2018 ஜனவரி 24 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எம்.அஹமட் அனாம், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வாகரையில் காட்டு யானையொன்று, துப்பாக்கிச்சூட்டு காயத்துக்கு இலக்காகி இறந்துள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை, தோணிதாண்டமடு வயல்வெளி பிரதேசத்தில் மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 80 மீற்றருக்கு அப்பால், பெண் யானையொன்று காயமடைந்த நிலையில்  சோர்வுற்று, நடக்கமுடியாதவாறு, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மயங்கி விழுந்துள்ளது.

இதனைக் கண்ட பொதுமக்கள், பிரதேச வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து,  சம்பவ இடத்துக்கு விரைந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், அதனைக் குணப்படுத்தும் முகமாக மருத்துவ சிகிச்சையளித்து வந்துள்ளனர்.

எனினும், சிகிச்சை பலனின்றிப் போனதால் நேற்று (23) மாலை 3 மணியளவில் குறித்த  யானை இறந்துள்ளதென, வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

சுகாதர பிரச்சினைகள் காரணமாக யானையின் உடலத்தை குறித்த பிரதேசத்தில் இருந்து விரைவில் அகற்றும் நடவடிக்கையில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் செயற்பட்டு வருகின்றனர்.  

இதேவேளை, மட்டக்களப்பு நகரில் இருந்து சுமார் 70 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள எல்லைக் கிராமமான தோணிதாட்டமடு பிரதேசத்துக்கு, இதுவரை காலமும் யானை பாதுகாப்பு மின்வேலி அமைத்துத் தரப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X