2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

தேர்தலில் போட்டியிட்டால் இடமாற்றம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 நவம்பர் 30 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிக்களத்தில் கடமைபுரியும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதாயின் அவர் கடமைப்பிரிவிலுள்ள உள்ளூராட்சி மன்றத்துக்காக தேர்தலில் போட்டியிட முடியாது என, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.

அவ்வாறு போட்டியிடுவதாயின், வேறு பிரதேசத்துக்கு அவர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டுமெனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழவின் செயலாளரின் கடிதத்தை மேற்கோள் காட்டி, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்ளப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரெட்ணம், மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலாளர்களுக்கும் எழுத்து மூலமான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .